Tuesday, December 28, 2010

முளைப்பாரி

நண்பர்களே நீங்கள் பார்த்து கொண்டிருப்பது எங்கள் ஊரின் சக்தி வாய்ந்த ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழாவிற்கு எங்கள் வீடு தயார் செய்த முளைப்பாரியின் வீடியோ

எனது ஊரின் பெயர் திருப்பாலைக்குடி.ராமநாதபுரம் மாவட்டம்,திருவாடனை வட்டத்தில் அமைந்த ஊர் எங்களது.கிராமமும் அல்லாமல் நகரமும் அல்லாமல் இரு சாயலும் கொண்ட ஊர் எங்களது ஊர்.வங்கக்கடல் தாலாட்டும் இரண்டு கிலோ மீட்டர் நீளம் கொண்ட கடற்கரையின் சொந்தக்காரர்கள் நாங்கள்.இதிகாசத்தொடு தொடர்பு கொண்ட ஊர்.திரேதா யுகத்தில் நடந்த ராமாயணத்தில் ஸ்ரீ ராமமூர்த்தி இலங்கை செல்ல கடலை அமைதிபடுத்த யாகம் செய்த தேவிபட்டினம் எங்கள் ஊரிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.அன்றிலிருந்து அலைகடல் தாலாட்டும் வங்ககடல் எங்கள் பகுதியில் மட்டும் அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்யாமல் இருக்கும்.மோர்ப்பண்ணை,திருப்பாலைக்குடி,தேவிபட்டினம் ஆகிய ஊர்களில் மட்டும் கடலில் பெரிய அலைகள் தோன்றுவதில்லை.அதற்க்கு அடுத்து உள்ள ஊர்களில் அலையின் சீற்றம் இருக்கும்.

எங்கள் ஊரில் இஸ்லாமிய ,இந்துமக்கள் சம அளவில் வசிக்கிறோம்.இஸ்லாமியர்களின் வழிப்பாட்டுத்த்லம் மூன்று எங்களது ஊரில் உண்டு.இந்துக்களின் கோவில்கள் இருபதிற்கும் மேல் உண்டு.அதில் எங்கள் பகுதியல் அமைந்த ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் ஆலயத்திற்கு ஆவணி மாதம் திருவிழா உண்டு.ஆவணி வளர்பிறையில் கோவிலுக்கு காப்பு கட்டுதளுடன் திருவிழா தொடங்கும்.திருவிழாவின் சிறப்பு முளைப்பாரி.

காப்புகட்டுதளுக்கு முந்திய தினங்களில் முளைப்பாரி வளர்க்கும் பக்தர்கள் முளைப்பாரி வளர்ப்பதற்கு தேவையான பொருட்களை சேகரிக்க தொடங்குவார்கள்.பசுவின் காய்ந்த சாணம்,செவனாம்பு என்று கிராமங்களில் சொல்லப்படும் ஒரு வகை செடி,சல்லடை அதாவது பனைமரத்தின் சருகு,முத்துக்கள்(சோழ விதை ,பயறு விதை,கடலை விதை).முதல் நாள் காப்பு கட்டியவுடன் பக்தர்கள் ஒவ்வொரு குழுவாக பிரிந்து தங்களுக்கு தோதான ஒரு வீட்டில் சென்று தங்கள் சேகரித்து வைத்துள்ள பொருட்களுடன் செல்வர்.அங்கு பாரியினை வைத்து பாரியின் அகன்ற பகுதியின் வழியாக சல்லடையை வைத்து பாரியின் அடிப்பகுதியில் உள்ள சிறிய துவாரத்தினை அடைத்து விடுவர்.பிறகு செவனாம்பு மற்றும் நொறுக்கிய காய்ந்த சாணம் இரண்டினையும் பாரியில் நிரப்பி பின் முத்துக்களை அதில் பரப்பி தண்ணீர் ஊற்றி வைப்பார்.பின்பு தினசரி காலையும் மாலையும் தண்ணீர் ஊற்றி கவனத்தோடு பராமரிப்பார்.ஏழாம் நாள் வரும்பொழுது முத்துக்கள் வளர்ந்து செடியாகிவிடும்.தயார் செய்த முலைப்பாரியினை எட்டாம் நாள் இரவு மாரியம்மனின் கோவில் முன்பு அமைத்துள்ள மேடையில் அனைத்து பக்தர்களும் கொண்டு வந்து வைத்து விடுவர். ஒன்பதாம் நாள் காலையில் புத்தாடை அணிந்து அனைவரும் கோவிலுக்கு வருவர்.பெண்கள் முளைப்பாரி பாடலை பாடிக்கொண்டு முளைகொட்டுவர்.பின்பு பக்தர்கள் அனைவரும் முளைப்பரியினை தலையில் தூக்கிக்கொண்டு ஊர்வலமாக சென்று கடலில் முலைப்பாரியினை கொட்டி விட்டு கோவிலில் சென்று அம்மனை வணங்கி வீடு வருவர்.

Friday, December 24, 2010

அம்பானிக்கு தனி சட்டமா?



பாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர் என்றனர் நமது முன்னோர்.இன்று நமது நாடு எல்லா துறைகளிலும் உலக அரங்கில் முன்னேறி கொண்டு இருக்கிறது. இதை யாராலும் மறுக்க முடியாது.நமது நாட்டின் மக்கள் தொகை 118 கோடி.இதில் வறுமை கோட்டிற்குள் வாழ்பவர்கள் 68 சதவிகிதம்.மீதமுள்ளவர்களில் நடுத்தரவர்க்கமும் ,முன்னேறியவர்களும் உண்டு.இத்தனை சதவித வறுமையின் கீழ் வாழ்பவர்களை வைத்துக்கொண்டே நாம் உலக நாடுகளுடன் போட்டி போடுகிறோம்.அப்படிஎன்றால் நமது நாட்டின் வறுமையின் அளவு குறைந்தால் நமது பாரதம் தான் அகில உலகின் சக்கரவர்த்தி.நமது நாட்டின் வறுமை அதிகரிக்க யார் காரணம்.ஊழல் அரசியல்வாதிகளும்,தவறான அதிகாரிகளும் தான் .







கீழே உள்ள படங்களை பாருங்கள் நமது நாட்டின் நிலை புரியும்






இது ஒரு தனிப்பட்ட நபரின் ஆடம்பர பங்களா.உலகின் பணக்காரர்களின் வரிசையில் ஐந்தாம் இடத்தில் உள்ள திரு.முகேஷம்பானி அவர்கள் கட்டியுள்ள வீடு இல்லை பங்களா இல்லையில்லை அரண்மனை இதற்க்கு என்ன பெயர் கொடுப்பது என்று யாருக்குமே தெரியவில்லை.உலகின் விலைமதிப்புமிக்க மளிகை இது தான்.இதன் மொத்த உயரம் 550 அடி(149 மீட்டர் ) 27 மாடிகள் சாதாரணமாக காட்டப்படும் மாடிகளின் உயர அளவோடு ஒப்பிட்டு பார்த்தால் 60 மாடிகளின் உயரம் வரும்.மாளிகையின் உட்புற சுற்றளவு மட்டும் 400000 சதுர அடியாகும்.




'தனியொரு மனிதனுக்கு உணவில்லைஎன்றால் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்' என்றான் ஒரு கவிஞன். இன்றைய இந்தியாவில் இருக்க இடமில்லாமல் தெருவிலும் ,சாக்கடைகளின் அருகிலும் வாழும் மக்களின் மத்தியில் ஒரு தனி நபரும் அவரது குடும்பமும் வாழ்வதற்கு இப்படி ஒரு மாளிகை கட்ட நமது அரசியல் சட்டம் இடம் கொடுக்கிறதா?இப்படி பணமும் செல்வாக்கும் உள்ள மனிதர்களின் பின்னால் அரசியல்வாதிகளும்,அதிகாரிகளும் ஓடினால் எப்பொழுது நாம் வல்லரசாக மாறுவது.
இதை விட கொடுமை என்னவென்றால் அந்த மாளிகையின் மின்சாரக்கட்டணம் 70 லட்சஞ்கலாம் . அதாவது சுமார் 7000 வீடுகள் கொண்ட ஒரு நகரம் பயன்படுத்தும் மின்சாரத்தினை அந்த ஒரு வீட்டின் பயன்பாட்டிற்கு வழங்கியுள்ளனர். நாம் ம்மின்சாரம் இல்லாமல் படும் அவதி நமக்கு நன்கு தெரியும்.இப்படி பணக்காரர்களின் பின்னாடி ஓடுவதை விட்டு ஏழைகளின் அடிப்படை தேவைகளை சரி செய்தாலே நமது நாட்டின் வறுமையின் அளவு குறைந்து நாம் வல்லரசாக உயர்ந்து விடலாம்.செய்வார்களா அரசியல்வாதிகளும்,அதிகாரிகளும். பாரதம் உலகின் உச்ச சக்தியாகும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் க.சசிகனி

Monday, August 16, 2010

இந்து மதமும் அறிவியலும்

இந்து மதத்தின் மேன்மைகள் உலகம் அறியாததல்ல .அறிவியலுக்கும் இந்து மதத்திற்கும் உள்ள தொடர்பினை இந்த கட்டுரையின் மூலம் இனி அறிவோம் .


நமது வரலாறுகளும்,இதிகாசங்களும் பொய்யில்லை.அவை சொல்லும் தத்துவங்களும், அறிவியல் உண்மைகளும் ஏராளம்.அவற்றில் ஒன்றினை நாம் தற்பொழுது பார்ப்போம்.நமது ராமாயணத்தில் ஒரு நிகழ்ச்சி உண்டு.ராவணன் உருமாறி வந்து சீதாதேவியை கவர்ந்து செல்லும் இடம்.மேம்போக்காக பார்த்தால் ஒரு நிகழ்ச்சி ஆழ்ந்து பார்த்தால் அதில் உள்ள விஞ்ஞானம் தெரியும்.நாம் தற்பொழுது தான் விமானத்தினை பார்க்கிறோம்.ரைட் சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்று சொல்கிறோம்.ஆனால் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நமது இதிகாசத்தில் விமானம் பற்றியும்,அதன் செயல்பாடுகள் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது.ராமாயணத்தில் குறிப்பிட்டுள்ள அந்த பகுதியை நன்கு கூர்ந்து பார்த்தால் தற்பொழுது ஒரு விமானம் எப்படி செயல்படுமோ அதே போன்று அந்த நிகழ்ச்சி விவரிக்கப்பட்டுஇருக்கும்.ஸ்ரீராமர் பொய்மானை விரட்டி சென்று இருப்பார்.பொய்மான் செய்த சதியை நம்பி சீதாப்பிராட்டி லச்மனனையும் அனுப்பி வைப்பார்.அந்த சமயம் போலிசாமியார் வேடம் தரித்து ராவணன் பிச்சை கேட்டு வருவான்.லட்சுமணன் கோட்டை தாண்டி பிச்சையிட வரும் சீதையை ராவணன் புஷ்பக விமானத்தில் கடத்தி செல்வான்.இது தான் அந்த பகுதி பின்பு குடிலுக்கு திரும்பும் ராம சகோதரர்கள் வணத்தில் குறிப்பிட்ட தூரம் செடி கொடிகள் அழிந்து இருப்பதை காண்பர்.அதற்க்கு காரணம் ராவணன் வந்து சென்ற விமானத்திற்கு இறங்குவதற்கும் ,மேலே கிளம்பி செல்வதற்கும் ஒரு ஓடு பாதை தேவைப்பட்டது நன்கு விளங்கும்.அந்த காட்சி ராமாயணத்தில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.1902 il ரைட் சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்று சொல்லப்படும் விமானத்தின் செயல்பாடுகள் தற்பொழுது எந்த வடிவில் உள்ளதோ அது ௧௭ லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நமது இதிகாசத்தில் சொல்லப்பட்டுள்ளது நமக்கு நன்கு விளங்கும்.

அன்புடன்

.சசிகனி

Monday, June 21, 2010

"பந்திக்கு முந்து படைக்கு பிந்து"

நமது முன்னோர் சொல்லி வைத்த சில பழமொழிகள் தற்பொழுது வேறு வடிவம் கொண்டுள்ளன.அவற்றின் உண்மை வடிவினை இத்தொடரின் மூலம் கண்டு வருகிறோம்.தற்பொழுது ஒரு பழமொழியின் தற்போதைய வடிவையும் உண்மை நிலையையும் காண்போம்.

"பந்திக்கு முந்து படைக்கு பிந்து"

நாம் தற்பொழுது இந்த பழமொழியின் உண்மை நிலையை காண்போம்.
நமது முன்னோர்கள் வீரத்திலும், ஈகைதிறனிலும்,விருந்தோம்பலிலும் சிறந்தவர்கள் என்பது உலகறிந்தது.அப்படி வாழ்ந்த நமது முன்னோர்கள் சொல்லி வைத்த அருமையான பலமொழிகளில் இதுவும் ஒன்று.தற்பொழுது இந்த பழமொழிக்கு உள்ள அர்த்தம் பந்தி என்று சொல்லப்படுகிற விருந்துகளுக்கு முந்திக்கொண்டு செல்ல வேண்டும் இல்லையென்றால் நமக்கு எதுவும் கிடைக்காது.பிறகு போர்களுக்கு போகும் பொழுது பின்னாடி தான் செல்ல வேண்டும் அப்பொழுது தான் நாம் காயம் படாமல் தப்பிக்கலாம்.வீரத்தில் சிறந்த நம் மூதாதையர் இப்படியா சொல்லி இருப்பார்கள்.சிந்தித்து பார்த்தால் உண்மை வேறு விதமாக இருக்கும்.உண்மை இதோ பந்திக்கு முந்து என்றால் விருந்துகளில் நம்மைப்போன்று அதிகமான ஆட்கள் வந்து இருப்பார்கள்.அவர்களுக்கும் நல்ல பசி இருக்கும்.ஆகவே நாம் அதிக நேரம் பந்தியிற் அமர்ந்து சாப்பிடாமல் முந்தி எழுந்து அடுத்தவர் சாப்பிட இடம் கொடுக்க வேண்டும்.ஆகவே பந்தியில் முந்தி எழுந்திரு என்பதே சரியானது.படைக்கு பிந்து என்றால் நாம் எதிரியிடம் சண்டையிடும் பொழுது நமது தாய் நாட்டுக்காக நம் உயிரையும் கொடுத்து போர் புரிய வேண்டும்.நமது படையில் அனைவரும் மடிந்தாலும் வீரமுடன் கடைசி வரை போரிட வேண்டும் இது தான் நமது முன்னோர் சொன்ன வார்த்தையின் சரியான அர்த்தமாகும்.ஆகவே நண்பர்களே விருந்தென்றால் சீக்கிரம் சாப்பிட்டு எழுந்து அடுத்தவர்களுக்கு இடம் கொடுப்போம்.போர் என்றால்இறுதி வரை போர் புரிந்து நமது முன்னோர் சொன்ன பண்பாட்டினை பாதுகாப்போம்.
என்றும் அன்புடன்
க.சசிகனி

Sunday, June 20, 2010

"கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை"

நமது முன்னோர் சொல்லி வைத்த சில பழமொழிகள் தற்பொழுது வேறு வடிவம் கொண்டுள்ளன.அவற்றின் உண்மை வடிவத்தினை நாம் இத்தொடரின் மூலம் காண்போம் .

"கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை "நாம் தற்பொழுது இந்த பழமொழியின் உண்மை வடிவினை காண்போம்.சங்க காலத்தில் நம் முன்னோர்கள் படுக்க பாய் பயன்படுத்தினார்கள்.அந்த பாய் புல்லுகொண்டு தயாரிக்கப்பட்டதாகும்.அந்தபுல்லு கற்பூரபுல்லு,கோரைப்புல்லு என இரு வகைப்படும்.கோரைபுல்லுக்கு கழு என்று வேறு ஒருபெயர் உண்டு. கற்பூரபுல்லு கொண்டு தயாரிக்கப்படும் பாயில் கற்பூர வாசனை வரும்.கற்பூர பாயின் விலை அதிகம் பெரிய செல்வந்தர்கள் தான் அதனை பயன்படுத்துவார்கள்.கோரைபுல்லு கொண்டு தயாரிக்கப்படும் பாய் சாதாரணமாக இருக்கும்.இதன் விளையும் குறைவு பாமர மக்கள் பயன்பாட்டிற்கு உதவும்.இதனை மனதில் வைத்து வந்த பழமொழிதான் "கழு தைக்க தெரியுமா கற்பூர வாசனை"கழு என்றகோரைபுல்லின் பெயருடன் தைக்க என்ற செயலும் இணைந்து 'கழுதைக்க,கழுதைக்க' என்று சொல்லி சொல்லி அவ்வார்த்தை மருவி 'கழுதைக்கு' என்று ஆகிவிட்டது.அதன்உண்மையான அர்த்தம் "கழு என்ற கோரைபுல்லு கொண்டு செய்யப்படும் பாயில் எப்படி கற்பூர வாசனை வரும்?" என்பது தான்.அது தான் தற்பொழுது மருவி "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை" என்று ஆகி விட்டது.அடுத்த கட்டுரையில் வேறு ஒரு பழமொழியின் தற்போதைய வடிவத்தின் உண்மை வடிவத்தினை காண்போம்.

அன்புடன்

.சசிகனி

Friday, June 18, 2010

கன்னியா? கடவுளா?

நின்றால்,நிமிர்ந்தால்.....நீ!
தின்றால்,திரும்பினால்.....நீ!
படுத்தால்,பார்த்தால்.....நீ!
எங்கும் நிறைதல்
எப்படி சாத்தியம்?
பெண்ணே
கன்னியா இல்லை
கடவுளா.....நீ?
.சசிகனி

நான் ரசித்த கவிதை 3

என்னுயிரே
மாலைத்தென்றல்
மழையின் சாரல்
மயிலிறகின் வருடல்
மழலையின் சிரிப்பு
இவை தருகிற சிலிர்ப்பை
காட்டிலும் நூறு மடங்கு
அதிகமாக சிலிர்க்க
வைப்பது
உன் கொலுசு
சத்தம்
என்றும் உன்னவன்
.சசிகனி

Thursday, June 17, 2010

நல்ல தலைவன் நரேந்திர மோடி


அன்று ஒரு நரேந்திரன் வந்தான் இவ்வுலகம் பாரதத்தின் பெருமையையும் ,இந்து மதத்தின் மேன்மையையும் அறிந்துகொண்டது .இன்று ஒரு நரேந்திரன் வந்துள்ளான் பாரதம் அவனால் உலகின் உச்ச சக்தியாக மாறப்போகிறது.நரேந்திரமோடி இன்று அவரை அறியாதார் உலகில் இல்லை.கடவுள் சொல்லியுள்ளார் உலகில் தீமைகள் அதிகரிக்கும் போதுஇவ்வுலகை காக்க நான் அவதரிப்பேன் என்று அந்த அவதாரமாக நான் இவரை பார்க்கிறேன்.யாருக்கும் பயபடாமல் உண்மைக்காக போர்புரியும் நீ இருக்கும் காலத்தில் நானும் இருக்கிறேன் என்பதை என்னும் பொழுதே என் மனம் குதுகலிக்கிறது.உனது ஆட்சியை பார்த்து எதிர்கட்சியினரே விருது தருகின்றனர் .இதை விட வேறு என்ன உதாரணம் வேண்டும் உனதுபெருமை சொல்ல .ராமபிரானின் ஆட்சியில் அனைத்து ஜீவராசிகளும் மகிழ்வோடு வாழ்ந்தனர் என்று ராம காதையில் படித்துள்ளேன் இன்று உனது ஆட்சியில்காண்கிறேன் .நீ பாரதத்தின் உயர்பதவியில் அமர்ந்து பாரதம் வல்லரசாகும் நாள் வெகு தொலைவில் இல்லை .நாளை நமதே

இந்து மதமும் அறிவியலும்


இந்து மதத்தின் மேன்மைகள் உலகம் அறியாததல்ல .அறிவியலுக்கும் இந்து மதத்திற்கும் உள்ள தொடர்பினை இந்த கட்டுரையின் மூலம் இனி அறிவோம் .


எங்கள் அம்மா நாங்கள் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்தால் காலை நன்றாக அலம்பி விட்டு உள்ளே வரச்சொல்லுவார்கள். காலில் சிறிது இடம் கூட தண்ணீர் படாமல் கழுவச்சொல்லுவார்கள். அப்படி செய்யவில்லை என்றால் அந்த தண்ணீர் படாத இடத்தினை சனிபகவான் வந்து பிடித்துகொள்வார்.பிறகு நமது வாழ்க்கையில் சிரமப்பட வேண்டியிருக்கும் .அதனால் நன்றாக அலம்பிவிட்டு உள்ளே வாருங்கள் என்று சொல்லுவார்கள்.இதனை பார்த்தல் சில அறிவுஜீவிகள் கிண்டல் பண்ண கூடும். ஆழ்ந்து பார்த்தல் அதில் எவ்வளவு உண்மை உள்ளது என்று தெரியவரும். நாம் வெளியில் சென்றால் பல இடங்களுக்கு செல்வோம்.அதனால் நமது கால்களில் பல கிருமிகள் தொற்றிக்கொள்ளும் அந்த கால்களோடு வீட்டிற்க்குள் வந்தால் வீட்டிற்குள்ளும் அந்த நோய்கிருமிகள் வந்து விடும் அதனால் தான் எனது அம்மா அப்படி சொல்லியுள்ளார்கள்.இதனை என்னிடம் எனது அம்மா நீ வெளியில் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளாய் அதனால் உனது காலில் கிருமிகள் இருக்கும் காலை அலம்பி விட்டு வீட்டிற்குள் வா என்று சொன்னால் அந்த இழம்பிராயத்தில் கேட்க்கும் மனநிலை என்னிடம் இருந்து இருக்காது.அதனால் சனிபகவானை சொல்லியிருக்கிறார்கள்.அதன் மூலம் எங்களுக்கும் அந்த நல்ல பழக்கம் பழகிவிட்டது.நாங்கள் எங்கு வெளியி சென்றாலும் வீட்டிற்குள் நுழையும் பொழுது காலை நன்றாக அலம்பிவிட்டு தான் செல்கிறோம் .இதனை ஆராய்ந்து பார்க்காமல் பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லும் சிலபேர் மூடநம்பிக்கை என்று சொல்கிறார்கள்.இந்து மதத்தில் உள்ள ஒவ்வொரு செயலுக்குபின்னாலும் ஒரு அர்த்தம் உண்டு.அடுத்த கட்டுரையில் வேறு ஒரு ஒப்பிடலை காண்போம்


என்றும் அன்புடன்

க.சசிகனி

நான் ரசித்த கவிதை 2






அன்பே




காதலிப்பவன் முட்டாள்




என்றான் என் நண்பன்




உன்னை நினைத்தேன்




மீண்டும் நினைத்தேன்




மறுபடியும் நினைத்தேன்




தீர்மானித்தேன் -நான்




அறிவாளியாக மாற




அவசியமில்லை -எனவே




உன்னை காதலிப்பேன்




காதலிப்பேன்




காதலித்துக்கொண்டு




இருப்பேன்




என் உயிர் உள்ளவரை




என்றும் உன்னவன்




.சசிகனி

நான் ரசித்த கவிதை


என்னுயிரே

கார்டிலே கால்வரி

எழுத கசக்கும்

சோம்பேறி என்னை

கவிதை புனையவைத்த

உன் காதலுக்கு

சிந்தனை சுரண்டலில்

சிந்தின துகள்கள்

யாவும் சமர்ப்பணம்

- உன்னவன்

Wednesday, June 16, 2010

தமிழும் இந்து மதமும்

இந்து மதத்தின் மூலமே தமிழ்மொழி தான்.இந்து மதத்தினை வழர்த்த பெருமை தமிழ்மொழியை தவிர வேறு எதற்கும் கிடையாது.கிராமங்களில் ஒரு வழக்கு உண்டு கிராமிய மக்கள் பேசும் வார்த்தைகளில் தான் நமது பண்பாடு வெளிப்படும் .இஸ்லாமியர்களை துலுக்கர் என்றும்,கிறிஸ்தவர்களை வேதக்காரர்கள் என்றும் சொல்லும் வழக்கு கிராமங்களில் உண்டு ஆனால் இந்து மதத்தவர்களை மட்டும் தமிழர்கள் என்று சொல்லுவார்கள்.இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால் தமிழன் என்றாலே அது இந்துக்களை தான் குறிக்கும்.

Tuesday, June 15, 2010

தன் மதத்தின் மீது நம்பிக்கையற்றவன் தன் மீதே நம்பிக்கை அற்ரவனாகிறான்
சுவாமி விவேகானந்தர்