Monday, October 31, 2011

 சசி இஷானா , சசி தரணி

Wednesday, January 5, 2011

காணாமல் போகும் கப்பல்கள்,விமானங்கள் - கதையல்ல நிஜம்?





பெர்முடா முக்கோணம் இது அதிசயம் அல்ல ஆச்சர்யம் இல்லையில்லை அதிர்ச்சி .நவீன அறிவியலுக்கும் விளங்காத அமானுஷ்ய ஆச்சர்ய பிரதேசம்.




























வடக்கு அட்லாண்டிக்

கடற்ப்பரப்பில் பெர்முடா,ப்ளோரிடா, போர்டோரிகா தீவுகளின்மையப்பகுதியில் சுமார் இருபத்தைந்து லட்சம் சதுர கிலோ மீட்டரில் முக்கோண வட்வில் அமைந்துள்ள கடற்பரப்பு தான் பெர்முடா முக்கோணம் என்று அழைக்கபடுகிறது.










பெர்முடா முக்கோணத்தின் வழியாக செல்கிற கப்பல்கள்,விமானங்கள் அதில் பயணம் செய்கிற மனிதர்களுடன் அப்படியே மாயமாய் மறைந்து விடுகிறது.இது வரை ஐம்பது கப்பல்களும்,இருபது விமானங்களும் மாயமாய் மறைந்து விட்டன.அவற்றில் சென்ற ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட மனிதர்களும் மாயமாகி விட்டனர்.இதன் வழியாக செல்பவை எப்படி மாயமாய் மறைகின்றன என்று அமெரிக்க நிபுணர்களும், விஞ்ஞானிகளும் தலையை பிய்த்துக்கொல்கிறனர்.










1812 டிசம்பர் 30 அன்று அமெரிக்காவின் pedriyaad எனும் உள்ளாசக்கப்பல் சுமார் 365 பயணிகளுடன் பெர்முடா முக்கோணம் வழியாக மியாமி தீவுக்கு செல்லும் வழியில் மாயமாய் மறைந்து விட்டனர்.கப்பல் கடலில் மூழ்கி இருக்கும் என்று கடற்படையினர் தேடினர் . பெர்முடா முக்கோணத்தின் கடற்படுகையின் எந்த இடத்திலும் கப்பலின் ஒரு உடைந்த பாகம் கூட கிடைக்க வில்லை அதிர்ச்சி என்னவென்றால் அங்கு கடலில் மீன்களே இல்லை என்பதுதான்.










பெர்முடா முக்கோணத்தின் அடிப்பரப்பில் 'வளைகுடா நீரோடை'உள்ளதால் நீரோட்டம் மெக்சிகோ,ப்ளோரிடா வழியாக வடக்கு அட்லாண்டிக் கடல் நோக்கி செல்லும் என்பதால் கப்பலை வடக்கு அட்லாண்டிக் கடற்பகுதியிலும் தேடினார்கள் . அங்கும் கப்பல் காணவில்லை.










1945 டிசம்பர் ஐந்தாம் தேதி அமெரிக்காவின் 'பிளைட்-19 'எனும் விமானம்தாங்கி போர்க்கப்பல் மியாமி தீவுக்கு பெர்முடா முக்கோணம் வழியாக சென்றது.வழக்கம் போல அதுவும் காணாமல் போனது. திரும்பவும் தேடினார்கள் ஏமாற்றமே மிஞ்சியது."நாங்கள் இப்போது எங்கே இருக்கிறோம் என்றே தெரியவில்லை.கடல்நீர் பச்சை கலரில் உள்ளது.எங்களை காப்பாற்றுங்கள்"இது அந்தக்கப்பலின் கேப்டன் கடைசியாக வோயர்லேசில் பேசியது.



















பெர்முடா முக்கோணத்தின் வெப்பமண்டல சுழல் காரணமாக மின்காந்த கதிர்வீச்சு அதிகமாக இருப்பதால் விமானங்கள் தடுமாறுகின்றன என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.கடற்படுகை படிமங்களில் மீத்தேன் வாயு கசிவால் நீரின் அடர்த்தி குறைகிறது இதனால் கப்பல்கள் மூழ்கலாம் என்று கடல் ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.அப்படியே வைத்துகொண்டாலும் விமானம் மற்றும் கப்பலின் பாகங்கள் எங்கே? இதற்க்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.









பெர்முடா முக்கோணத்தில் செவ்வாய் கிரகவாசிகள் இருந்துகொண்டு கப்பல் மற்றும் விமானங்களை கடத்திக்கொண்டு போகிறார்கள் என்ற பேச்சும் உண்டு.புராதான காலத்தில் அந்தப்பகுதியில் வசித்தவர்கள் மந்திர தந்திரத்தில் வல்லவர்கள் .கடல்கோளில் அவர்கள் வசித்த பகுதி கடலுக்குள் போய்விட்டது அவர்களின் ஆவிகள் தான் இதனை செய்கின்றன என்று நம்புவோரும் உண்டு.


ஆனால் இவற்றில் எதுவுமே நிரூபிக்கப்படவில்லை.ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகள் தொடர்ந்து நடந்துகொண்டு தானிருக்கிறது.ஆன்னல் இதுவரை மர்மம் விலகவில்லை.என்று விடை கிடைக்கும் என்று உங்களுடன் நானும் காத்துக்கொண்டு இருக்கிறேன் அன்புடன் க.சசிகனி