Tuesday, December 28, 2010

முளைப்பாரி

நண்பர்களே நீங்கள் பார்த்து கொண்டிருப்பது எங்கள் ஊரின் சக்தி வாய்ந்த ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழாவிற்கு எங்கள் வீடு தயார் செய்த முளைப்பாரியின் வீடியோ

எனது ஊரின் பெயர் திருப்பாலைக்குடி.ராமநாதபுரம் மாவட்டம்,திருவாடனை வட்டத்தில் அமைந்த ஊர் எங்களது.கிராமமும் அல்லாமல் நகரமும் அல்லாமல் இரு சாயலும் கொண்ட ஊர் எங்களது ஊர்.வங்கக்கடல் தாலாட்டும் இரண்டு கிலோ மீட்டர் நீளம் கொண்ட கடற்கரையின் சொந்தக்காரர்கள் நாங்கள்.இதிகாசத்தொடு தொடர்பு கொண்ட ஊர்.திரேதா யுகத்தில் நடந்த ராமாயணத்தில் ஸ்ரீ ராமமூர்த்தி இலங்கை செல்ல கடலை அமைதிபடுத்த யாகம் செய்த தேவிபட்டினம் எங்கள் ஊரிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.அன்றிலிருந்து அலைகடல் தாலாட்டும் வங்ககடல் எங்கள் பகுதியில் மட்டும் அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்யாமல் இருக்கும்.மோர்ப்பண்ணை,திருப்பாலைக்குடி,தேவிபட்டினம் ஆகிய ஊர்களில் மட்டும் கடலில் பெரிய அலைகள் தோன்றுவதில்லை.அதற்க்கு அடுத்து உள்ள ஊர்களில் அலையின் சீற்றம் இருக்கும்.

எங்கள் ஊரில் இஸ்லாமிய ,இந்துமக்கள் சம அளவில் வசிக்கிறோம்.இஸ்லாமியர்களின் வழிப்பாட்டுத்த்லம் மூன்று எங்களது ஊரில் உண்டு.இந்துக்களின் கோவில்கள் இருபதிற்கும் மேல் உண்டு.அதில் எங்கள் பகுதியல் அமைந்த ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் ஆலயத்திற்கு ஆவணி மாதம் திருவிழா உண்டு.ஆவணி வளர்பிறையில் கோவிலுக்கு காப்பு கட்டுதளுடன் திருவிழா தொடங்கும்.திருவிழாவின் சிறப்பு முளைப்பாரி.

காப்புகட்டுதளுக்கு முந்திய தினங்களில் முளைப்பாரி வளர்க்கும் பக்தர்கள் முளைப்பாரி வளர்ப்பதற்கு தேவையான பொருட்களை சேகரிக்க தொடங்குவார்கள்.பசுவின் காய்ந்த சாணம்,செவனாம்பு என்று கிராமங்களில் சொல்லப்படும் ஒரு வகை செடி,சல்லடை அதாவது பனைமரத்தின் சருகு,முத்துக்கள்(சோழ விதை ,பயறு விதை,கடலை விதை).முதல் நாள் காப்பு கட்டியவுடன் பக்தர்கள் ஒவ்வொரு குழுவாக பிரிந்து தங்களுக்கு தோதான ஒரு வீட்டில் சென்று தங்கள் சேகரித்து வைத்துள்ள பொருட்களுடன் செல்வர்.அங்கு பாரியினை வைத்து பாரியின் அகன்ற பகுதியின் வழியாக சல்லடையை வைத்து பாரியின் அடிப்பகுதியில் உள்ள சிறிய துவாரத்தினை அடைத்து விடுவர்.பிறகு செவனாம்பு மற்றும் நொறுக்கிய காய்ந்த சாணம் இரண்டினையும் பாரியில் நிரப்பி பின் முத்துக்களை அதில் பரப்பி தண்ணீர் ஊற்றி வைப்பார்.பின்பு தினசரி காலையும் மாலையும் தண்ணீர் ஊற்றி கவனத்தோடு பராமரிப்பார்.ஏழாம் நாள் வரும்பொழுது முத்துக்கள் வளர்ந்து செடியாகிவிடும்.தயார் செய்த முலைப்பாரியினை எட்டாம் நாள் இரவு மாரியம்மனின் கோவில் முன்பு அமைத்துள்ள மேடையில் அனைத்து பக்தர்களும் கொண்டு வந்து வைத்து விடுவர். ஒன்பதாம் நாள் காலையில் புத்தாடை அணிந்து அனைவரும் கோவிலுக்கு வருவர்.பெண்கள் முளைப்பாரி பாடலை பாடிக்கொண்டு முளைகொட்டுவர்.பின்பு பக்தர்கள் அனைவரும் முளைப்பரியினை தலையில் தூக்கிக்கொண்டு ஊர்வலமாக சென்று கடலில் முலைப்பாரியினை கொட்டி விட்டு கோவிலில் சென்று அம்மனை வணங்கி வீடு வருவர்.

Friday, December 24, 2010

அம்பானிக்கு தனி சட்டமா?



பாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர் என்றனர் நமது முன்னோர்.இன்று நமது நாடு எல்லா துறைகளிலும் உலக அரங்கில் முன்னேறி கொண்டு இருக்கிறது. இதை யாராலும் மறுக்க முடியாது.நமது நாட்டின் மக்கள் தொகை 118 கோடி.இதில் வறுமை கோட்டிற்குள் வாழ்பவர்கள் 68 சதவிகிதம்.மீதமுள்ளவர்களில் நடுத்தரவர்க்கமும் ,முன்னேறியவர்களும் உண்டு.இத்தனை சதவித வறுமையின் கீழ் வாழ்பவர்களை வைத்துக்கொண்டே நாம் உலக நாடுகளுடன் போட்டி போடுகிறோம்.அப்படிஎன்றால் நமது நாட்டின் வறுமையின் அளவு குறைந்தால் நமது பாரதம் தான் அகில உலகின் சக்கரவர்த்தி.நமது நாட்டின் வறுமை அதிகரிக்க யார் காரணம்.ஊழல் அரசியல்வாதிகளும்,தவறான அதிகாரிகளும் தான் .







கீழே உள்ள படங்களை பாருங்கள் நமது நாட்டின் நிலை புரியும்






இது ஒரு தனிப்பட்ட நபரின் ஆடம்பர பங்களா.உலகின் பணக்காரர்களின் வரிசையில் ஐந்தாம் இடத்தில் உள்ள திரு.முகேஷம்பானி அவர்கள் கட்டியுள்ள வீடு இல்லை பங்களா இல்லையில்லை அரண்மனை இதற்க்கு என்ன பெயர் கொடுப்பது என்று யாருக்குமே தெரியவில்லை.உலகின் விலைமதிப்புமிக்க மளிகை இது தான்.இதன் மொத்த உயரம் 550 அடி(149 மீட்டர் ) 27 மாடிகள் சாதாரணமாக காட்டப்படும் மாடிகளின் உயர அளவோடு ஒப்பிட்டு பார்த்தால் 60 மாடிகளின் உயரம் வரும்.மாளிகையின் உட்புற சுற்றளவு மட்டும் 400000 சதுர அடியாகும்.




'தனியொரு மனிதனுக்கு உணவில்லைஎன்றால் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்' என்றான் ஒரு கவிஞன். இன்றைய இந்தியாவில் இருக்க இடமில்லாமல் தெருவிலும் ,சாக்கடைகளின் அருகிலும் வாழும் மக்களின் மத்தியில் ஒரு தனி நபரும் அவரது குடும்பமும் வாழ்வதற்கு இப்படி ஒரு மாளிகை கட்ட நமது அரசியல் சட்டம் இடம் கொடுக்கிறதா?இப்படி பணமும் செல்வாக்கும் உள்ள மனிதர்களின் பின்னால் அரசியல்வாதிகளும்,அதிகாரிகளும் ஓடினால் எப்பொழுது நாம் வல்லரசாக மாறுவது.
இதை விட கொடுமை என்னவென்றால் அந்த மாளிகையின் மின்சாரக்கட்டணம் 70 லட்சஞ்கலாம் . அதாவது சுமார் 7000 வீடுகள் கொண்ட ஒரு நகரம் பயன்படுத்தும் மின்சாரத்தினை அந்த ஒரு வீட்டின் பயன்பாட்டிற்கு வழங்கியுள்ளனர். நாம் ம்மின்சாரம் இல்லாமல் படும் அவதி நமக்கு நன்கு தெரியும்.இப்படி பணக்காரர்களின் பின்னாடி ஓடுவதை விட்டு ஏழைகளின் அடிப்படை தேவைகளை சரி செய்தாலே நமது நாட்டின் வறுமையின் அளவு குறைந்து நாம் வல்லரசாக உயர்ந்து விடலாம்.செய்வார்களா அரசியல்வாதிகளும்,அதிகாரிகளும். பாரதம் உலகின் உச்ச சக்தியாகும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் க.சசிகனி