Monday, June 21, 2010
"பந்திக்கு முந்து படைக்கு பிந்து"
"பந்திக்கு முந்து படைக்கு பிந்து"
நாம் தற்பொழுது இந்த பழமொழியின் உண்மை நிலையை காண்போம்.
நமது முன்னோர்கள் வீரத்திலும், ஈகைதிறனிலும்,விருந்தோம்பலிலும் சிறந்தவர்கள் என்பது உலகறிந்தது.அப்படி வாழ்ந்த நமது முன்னோர்கள் சொல்லி வைத்த அருமையான பலமொழிகளில் இதுவும் ஒன்று.தற்பொழுது இந்த பழமொழிக்கு உள்ள அர்த்தம் பந்தி என்று சொல்லப்படுகிற விருந்துகளுக்கு முந்திக்கொண்டு செல்ல வேண்டும் இல்லையென்றால் நமக்கு எதுவும் கிடைக்காது.பிறகு போர்களுக்கு போகும் பொழுது பின்னாடி தான் செல்ல வேண்டும் அப்பொழுது தான் நாம் காயம் படாமல் தப்பிக்கலாம்.வீரத்தில் சிறந்த நம் மூதாதையர் இப்படியா சொல்லி இருப்பார்கள்.சிந்தித்து பார்த்தால் உண்மை வேறு விதமாக இருக்கும்.உண்மை இதோ பந்திக்கு முந்து என்றால் விருந்துகளில் நம்மைப்போன்று அதிகமான ஆட்கள் வந்து இருப்பார்கள்.அவர்களுக்கும் நல்ல பசி இருக்கும்.ஆகவே நாம் அதிக நேரம் பந்தியிற் அமர்ந்து சாப்பிடாமல் முந்தி எழுந்து அடுத்தவர் சாப்பிட இடம் கொடுக்க வேண்டும்.ஆகவே பந்தியில் முந்தி எழுந்திரு என்பதே சரியானது.படைக்கு பிந்து என்றால் நாம் எதிரியிடம் சண்டையிடும் பொழுது நமது தாய் நாட்டுக்காக நம் உயிரையும் கொடுத்து போர் புரிய வேண்டும்.நமது படையில் அனைவரும் மடிந்தாலும் வீரமுடன் கடைசி வரை போரிட வேண்டும் இது தான் நமது முன்னோர் சொன்ன வார்த்தையின் சரியான அர்த்தமாகும்.ஆகவே நண்பர்களே விருந்தென்றால் சீக்கிரம் சாப்பிட்டு எழுந்து அடுத்தவர்களுக்கு இடம் கொடுப்போம்.போர் என்றால்இறுதி வரை போர் புரிந்து நமது முன்னோர் சொன்ன பண்பாட்டினை பாதுகாப்போம்.
என்றும் அன்புடன்
க.சசிகனி
Sunday, June 20, 2010
"கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை"
நமது முன்னோர் சொல்லி வைத்த சில பழமொழிகள் தற்பொழுது வேறு வடிவம் கொண்டுள்ளன.அவற்றின் உண்மை வடிவத்தினை நாம் இத்தொடரின் மூலம் காண்போம் .
"கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை "நாம் தற்பொழுது இந்த பழமொழியின் உண்மை வடிவினை காண்போம்.சங்க காலத்தில் நம் முன்னோர்கள் படுக்க பாய் பயன்படுத்தினார்கள்.அந்த பாய் புல்லுகொண்டு தயாரிக்கப்பட்டதாகும்.அந்தபுல்லு கற்பூரபுல்லு,கோரைப்புல்லு என இரு வகைப்படும்.கோரைபுல்லுக்கு கழு என்று வேறு ஒருபெயர் உண்டு. கற்பூரபுல்லு கொண்டு தயாரிக்கப்படும் பாயில் கற்பூர வாசனை வரும்.கற்பூர பாயின் விலை அதிகம் பெரிய செல்வந்தர்கள் தான் அதனை பயன்படுத்துவார்கள்.கோரைபுல்லு கொண்டு தயாரிக்கப்படும் பாய் சாதாரணமாக இருக்கும்.இதன் விளையும் குறைவு பாமர மக்கள் பயன்பாட்டிற்கு உதவும்.இதனை மனதில் வைத்து வந்த பழமொழிதான் "கழு தைக்க தெரியுமா கற்பூர வாசனை"கழு என்றகோரைபுல்லின் பெயருடன் தைக்க என்ற செயலும் இணைந்து 'கழுதைக்க,கழுதைக்க' என்று சொல்லி சொல்லி அவ்வார்த்தை மருவி 'கழுதைக்கு' என்று ஆகிவிட்டது.அதன்உண்மையான அர்த்தம் "கழு என்ற கோரைபுல்லு கொண்டு செய்யப்படும் பாயில் எப்படி கற்பூர வாசனை வரும்?" என்பது தான்.அது தான் தற்பொழுது மருவி "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை" என்று ஆகி விட்டது.அடுத்த கட்டுரையில் வேறு ஒரு பழமொழியின் தற்போதைய வடிவத்தின் உண்மை வடிவத்தினை காண்போம்.
அன்புடன்
க.சசிகனி
Friday, June 18, 2010
கன்னியா? கடவுளா?
நான் ரசித்த கவிதை 3
மாலைத்தென்றல்
மழையின் சாரல்
மயிலிறகின் வருடல்
மழலையின் சிரிப்பு
இவை தருகிற சிலிர்ப்பை
காட்டிலும் நூறு மடங்கு
அதிகமாக சிலிர்க்க
வைப்பது
உன் கொலுசு
சத்தம்
என்றும் உன்னவன்
க.சசிகனி
Thursday, June 17, 2010
நல்ல தலைவன் நரேந்திர மோடி
இந்து மதமும் அறிவியலும்
