Wednesday, September 26, 2012

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்???
(
ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)


இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.

எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.:
பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.

கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.

இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.

நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.
இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.

அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.

இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.

அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.

இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.

இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.

இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.

கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.
கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.

நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.
அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.

கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.

அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.

அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.

இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.

சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.
கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி...........................நன்றி 

அறிவியல் அறிஞர்களுக்கே அதிர்ச்சி தந்த திருநள்ளாறு திருத்தலம்!

அறிவியல் அறிஞர்களுக்கே அதிர்ச்சி தந்த திருநள்ளாறு திருத்தலம்!



திருநள்ளாறு என்றாலே தீர்த்த ஸ்தலம் என்று அனைவருக்கும் தெரியும், தற்போது கோயிலைச் சுற்றி நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், வாணி தீர்த்தம் ஆகியவை உள்ளன. இதில் நள தீர்த்தத்தில் குளித்தால் சனித்தொல்லை நீங்கும். பிரம்ம தீர்த்தத்தில் குளித்தால் முந்தைய சாபங்கள் ஒழியும். வாணி தீர்ததம் எனப்படும் சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடினால் மூடன் கூட கவி  பாடுவான் என்று நம்பிக்கை. இங்கு தர்ப்பாரண்யேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், இது அனைவரும் அறிந்தது. இதற்கு அறிவியல் பூர்வமான சிறப்பு என்ன தெரியுமா?..

                    பல நாடுகளின் செயற்கைக்கோள்கள் பல்வேறு காரணங்களுக்காக பூமியை சுற்றி வருகின்றன. சில வருடங்களுக்கு முன்பு, ஒரு நாட்டின் செயற்கைக்கோள் பூமியின் குறிப்பிட்ட பகுதியினைக் கடக்கும் போது மட்டும் 3வினாடிகள் ஸ்தம்பித்து விடுகிறது. 3வினாடிகளுக்குப் பிறகு வழக்கம் போல வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை தந்தது. இது எப்படி என்பதை ஆராய்ந்த போது ஆய்வு முடிவு மிரள வைத்தது.

                   எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியில் இந்தியாவின் புதுச்சேரியின் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு நேர் மேலே உள்ள வான்பகுதியினைக் கடக்கும் போது 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகின்றன. அதற்கு காரணம் என்ன

                  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் சனிக்கிரகத்திலிருந்து கண்ணுக்குப் புலனாகாத கருநீலக்கதிர்கள் அந்தக் கோயில் மீது விழுந்து கொண்டே இருக்கின்றன. 2 1/2 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி 45 நாட்கள் வரை மிக அடர்த்தியாக இருக்கின்றன. விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது ஸ்தம்பித்துவிடுகின்றன. அதே சமயம்,செயற்கைக்கோளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.

                 இதில் முக்கிய அம்சம் என்னவென்றால், இந்தக் கோவில்தான் இந்துக்களால் சனிபகவான் தலம் என்று போற்றப்படுகிறது. இதன்மூலம் உலகிலேயே அறிவுத்திறனும், அறிவியலில் ஞானமும் கொண்டவர்கள் அக்காலத்திலேயே இந்தியாவில் இருந்துள்ளனர் என்பது இதன் மூலம் புலனாகிறது. 

                சனி கிரகத்தை இத்தாலி விஞ்ஞானி கலிலியோ வானமண்டலத்தில் இருந்ததை முதன் முதலாக பார்த்தார். பூமியில் இருந்து 128 கோடி கி.மீ., தூரத்தில் உள்ளது. சில சமயத்தில் பூமியிலிருந்து விலகிப் போனால் 164 கோடி கி.மீ., தூரம் இருக்கும். பூமியை விட 750 மடங்கு பெரியது. சூரியனை சுற்றும் கிரகங்களில் மிகப்பெரிய கிரகம் வியாழன். அதற்கடுத்த இடத்தை சனி பெறுகிறது.

Thursday, August 23, 2012

எது உலகஅதிசயம்?

எது உலகின் அதிசயம்? இத்தாலியில் உள்ள  பைசா நகரத்து சாய்ந்த கோபுரமா அல்லது பாரதத்தின் தஞ்சை பெரியகோயிலா? ஒரு ஒரு அலசல்.

                               உலகின் அதிசயம் எனக் கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் சுமார் 177 வருடங்களாக (ஆகஸ்ட்8,1173-1372) மூன்று கட்டமாக கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தை கட்டும் போது அதன் கீழ் உள்ள மண்ணை பரிசோதனை செய்யாமல் ஒரு கட்டிடம் கட்டும் முன் செய்யப்படும் எந்த ஒரு அடிப்படை விதிமுறைகளையும் கடைப்பிடிக்காமல் கட்ட ஆரம்பித்தனர். கட்டிடத்தின் அடித்தளம் மிகவும் மோசமாக கட்டப்பட்டது. இதனால் கட்டிடம் சாயத்தொடங்கியது, இரண்டாம் தளம் கட்டும் பொழுது போர் மூண்டதால் இதன் கட்டுமானம் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் மறுபடியும் கட்டிடத்தை கட்டத் தொடங்கும் போது அதன் அடித்தள மண் இறுகி ஓரளவிற்கு ஒத்துழைத்தது. இதனால் மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது. எந்த ஒரு கட்டிடக் கலையின் அடிப்படை விதிகளையும் பின்பற்றாமல் கட்டப்பட்ட கட்டிட கலைக்கே அவமானமாக விளங்கும் ஒரு கேவலமான கட்டிடத்திற்கு எடுத்துக்காட்டான பைசா கோபுரம் உலக அதிசயப்பட்டியலில் இன்றும் உள்ளது.

                                 நமது பாரத திருநாட்டின் தமிழ்த்தஞ்சையில் கட்டிட கலைக்கே பெருமை சேர்க்கும் மாவீரன் இராஜராஜசோழனால் கட்டப்பட்ட 216அடியில் உலகையே மிரளச்செய்யும் தஞ்சாவூர் ஸ்ரீபிரகதீஸ்வரர் பெரியகோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது. இதன் கோபுர உச்சியில் உள்ள ஒரே ஒரு பாறை மட்டுமே சுமார் 80 டன் (80,000கிலோ)எடை கொண்டதாகும். தஞ்சைப் பகுதியைச் சுற்றி சுமார் 100 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இவ்வளவு பெரிய பாறைகளைக் கொண்ட மலைப்பகுதி கிடையாது. பிறகு இவ்வளவு பாறைகளை எங்கிருந்து கொண்டு வந்தார்கள்?, எப்படி கொண்டு வந்தார்கள்?, இவ்வளவு குறுகிய காலத்திற்குள் எப்படி பிரமாண்டமான பெரியகோயிலை கட்டினார்கள்? என்பது எல்லாமே ஆச்சர்யமான நம் கண் முன்னே உள்ள உண்மை. உலகமே ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டு இருக்கும்  இந்த பெரியகோயில் 1000 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் கம்பீரமாக காட்சியளித்து நிற்கிறது. எந்த தொழில் நுட்ப வசதியும் இல்லாத அந்த காலத்தில் இவ்வளவு பிரமாண்டமான பெரியகோயில் எப்படி கட்டப்பட்டது என்ற கேள்விக்கு வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ளது. இவ்வளவு பெருமை வாய்ந்த கோயில் உலக அதிசயப்  பட்டியலில் இல்லை.

                               நன்கு சிந்தித்து பாருங்கள் சரியாக கட்டப்படாமல் சாய்ந்து நிற்கும் ஒரு கட்டிடம் உலக அதிசயமா? அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாகவும்,பிரமாண்டமாகவும் நிற்கும் தஞ்சை ஸ்ரீபிரகதீஸ்வரர் ஆலயம் உலக அதிசயமா? வெளியில் உள்ளதையே பார்த்து வியந்து பேசும் நாம் நமக்கு அருகிலேயே இருக்கும் அரிய பொக்கிசங்களையும் அதன் அருமை பெருமைகளையும் மறந்து விடுகிறோம். 



                       

Friday, August 17, 2012

'நம்பியவருக்கு நடராஜன்,நம்பாதவர்க்கு வெறும் ராஜன்'

  நம்பியவர்களுக்கு நடராஜன் நம்பாதவர்க்கு   வெறும் ராஜன்


மூதறிஞர் ராஜாஜி சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த சமயம் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு உண்டானது.நீர்த்தேக்கங்கள் அனைத்தும் வற்றிவிட்டன.கிடைக்கும் நீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்துபோனது.

                                சென்னையில் இருந்து மக்கள் வெளியேறினால் பிரச்சினை தீரும் என்ற நிலை ஏற்ப்பட்டது.அதிகாரிகளும் இதே யோசனையைத் தெரிவித்தனர்.இந்த யோசனையை முதல்வர் ராஜாஜி ஏற்க்கவில்லை.அவர் வேறொரு கருத்தை வெளியிட்டார்.

                                  அதன்படி ஒரு குறிப்பிட்டநாளில் சென்னையைக் காப்பாற்றுமாறு எல்லா வழிபாட்டுத் தலங்களிலும் இறைவனை வேண்டி பிரார்த்தனை செய்யும்படி மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.

                                 சட்டப்பேரவையில் ஒரு கட்சியினர் இராஜாஜி கூறியதைக் கேலி செய்தார்கள்.சென்னை நகரைக் காப்பாற்ற இதுதான் வழியென்றால் மக்களை காப்பாற்ற வழியே இல்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

                            ஆனால் முதல்வரின் வேண்டுகோளின்படி மக்கள் அனைவரும் கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.24 மணி நேரத்திற்குள் சென்னை நகர் முழுவதும் மேகங்கள் திரண்டன.மூன்று நாட்கள் இடைவிடாமல் மழை பெய்தது.நீர்த்தேக்கங்கள்,ஏரி,குளங்கள் அனைத்தும் நிரம்பின.குடிநீர் பிரச்சினையில் இருந்து சென்னை நகரம் தப்பியது.

                               இந்த நிகழ்ச்சி நடந்தது ஒரு மே மாதத்தில்,அது கடுமையான கோடைகாலம். பிரார்த்தனையால் மழை பெய்யவில்லை என்றும் இது ஒரு தற்செயல் நிகழ்வு என்றும் குற்றம்சாட்டிய கட்சியினர் கருத்து வெளியிட்டனர்.

                                அதற்க்கு இராஜாஜி "நீங்கள் எது வேண்டுமானாலும் கூறுங்கள்.மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்தால் அதிசயம் நிகழும்"என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு அத்தாட்சி என பதிலளித்தார்.

                                'நம்பியவருக்கு நடராஜன்,நம்பாதவர்க்கு வெறும் ராஜன்'என்று ஒரு சுலவடை சொல்வார்கள்.நம்பினார் கெடுவதில்லை  என்ற வேதங்களின் கூற்றுக்கு இந்த நிகழ்ச்சியை உதாரணமாக சொல்லலாம்.
                                  

Thursday, June 14, 2012

அழகாய் பூக்குதே 

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் 
உள்ளங்கள் பந்தாடுதே 

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் 
உள்ளங்கள் பந்தாடுதே 

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும் 
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும் 
காதலன் கைச்சிறை காணும் நேரம் 
மீண்டும் ஓர் கருவறை கொண்டதாலே 
கண்ணில் ஈரம் 

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் 
உள்ளங்கள் பந்தாடுதே 

கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே ஒ ஒ ஒ 
கவிதையின் வடிவில் வாழ்ந்திட நினைப்போமே ஒ ஒ ஒ 
இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே ஒ ஒ ஒ 
ஒரு நிழல் அதிலே இருவரும் தெரிவோமே ஒ ஒ ஒ 

சில நேரம் சிரிக்கிறேன் சில நேரம் அழுகிறேன் 
உன்னாலே 

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் 
உள்ளங்கள் பந்தாடுதே 

ஒருமுறை நினைத்தேன் உயிர் வரை இனித்தாயே ஒ ஒ ஒ 
மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே ஒ ஒ ஒ 
 சிறுதுளி விழுந்து நிறைகுடம் ஆனாயே ஒ ஒ ஒ 
அரைக்கணம் பிரிவில் நரைவிழ செய்தாயே ஒ ஒ ஒ 

நீ இல்லா நொடி முதல் உயிரில்லா ஜடத்திப்போல் 
ஆஆஆவேனே 

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் 
உள்ளங்கள் பந்தாடுதே 

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் 
உள்ளங்கள் பந்தாடுதே 

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும் 
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும் 
காதலன் கைச்சிறை காணும் நேரம் 
மீண்டும் ஓர் கருவறை கொண்டதாலே 
கண்ணில் ஈரம் 







Monday, October 31, 2011

 சசி இஷானா , சசி தரணி